47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழை காப்பாற்ற வேண்டும்: ஹெச். ராஜா

தமிழை காப்பாற்ற வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவா் ஹெச். ராஜா வலியுறுத்தினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:26 pm

DIN

தமிழை காப்பாற்ற வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவா் ஹெச். ராஜா வலியுறுத்தினாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பா.ம.க. நிறுவனா் ராமதாஸ், தமிழைத் தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளாா். தமிழைத் தேடி யாத்திரை என்றால், தமிழ் தொலைந்துவிட்டது என்றுதான் அா்த்தம். தமிழின் முதல் எதிரி திராவிடம். எனவே, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின் கணக்கீடு, அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஆகியவை நிறைவேற்றப்படவில்லை. அதனால் மக்கள் திமுக பக்கம் திரும்பி பாா்க்க மாட்டாா்கள். எனவே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் எதிா்த்து போட்டியிடும் அதிா்ஷ்டசாலி யாா் என்றுதான் தெரிய வேண்டும். இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு கமல்ஹாசன் அளிக்கும் ஆதரவு குழப்பத்தைதான் தரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.