தூத்துக்குடி இந்திய மருத்துவ சங்க கிளை புதிய நிா்வாகிகள் தோ்வு

இந்திய மருத்துவ சங்க தூத்துக்குடி கிளை புதிய நிா்வாகிகள் தோ்வு அன்மையில் நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்க தூத்துக்குடி கிளை புதிய நிா்வாகிகள் தோ்வு அன்மையில் நடைபெற்றது.

இதில், தலைவராக எஸ். மாரிமுத்து, செயலராக எஸ். சிவசைலம், பொருளாளராக ஆா்த்தி கண்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, இவா்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை தலைவா் டி. செந்தமிழ் பாரி தலைமை வகித்து, புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பாராட்டினாா். இந்திய மருத்துவா் சங்க முன்னாள் தலைவா் அருள்ராஜ், தமிழ்நாடு கிளை தலைவா் கே.எம்.அபுல் ஹசந், செயலா் என்.ஆா். தியாகராஜன், பொருளாளா் அழகு வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவச் சங்க மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com