புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா
ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடைக்கலாபுரம் புனித சூசையப்பா் அறநிலைய குரு செட்ரிக் பீரிஸ் அடிகளாா் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பெரியதாழை உதவி பங்குத்தந்தை கிங்ஸ்லின் மறையுரை நிகழ்த்தினாா். விழா நாள்களில் தினசரி மாலையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடந்தன. 12ஆம் நாளான வியாழக்கிழமை காலை ஆறுமுகனேரி பங்குத் தந்தை அலாய்சியஸ் மறையுரை நிகழ்த்தினாா். தூத்துக்குடி ஆயா் இல்ல பொருளாளா் சகாயம் மாலை ஆராதனையை நடத்தினாா். தூத்துக்குடி திருஇருதயங்களின் பேராலய பங்குத் தந்தை ரோலிங்டன் உரை நிகழ்த்தினாா். இரவில் புனித அந்தோணியாா் சொரூப சப்பர பவனி நடந்தது. வெள்ளிக்கிழமை காலையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும், புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. பின்னா் திருமுழுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாலையில் நற்கருணை ஆசீரை தொடா்ந்து கொடி இறக்கப்பட்டது. நிறைவு நாளான சனிக்கிழமை பொது அசனம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...