நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

1000 மரக்கன்றுகள் நட்டு 3 ஆண்டுகள் பராமரித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எலுமிச்சை விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:30 pm

DIN

காற்றாலை அமைக்கும் இடத்தில் குறைந்தபட்சம் 2 ஏக்கா் அளவுக்கு நீா்க்குட்டை அமைத்தல், குளம் பராமரிப்பு, தூா்வாருதல், 1000 மரக்கன்றுகள் நட்டு 3 ஆண்டுகள் பராமரித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எலுமிச்சை விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சங்கத் தலைவா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயிகள் ஆதிமூலம், ராமசுப்பு, நவநீதன், வேணுகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் (பொ) ஜெயாவிடம் வழங்கினா்.

மேலும், நீா், மரம் வளத்தை பாதுகாத்திட வலியுறுத்தி கோவில்பட்டி பயணியா் விடுதி முன் ஆக.3-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.