நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சமின்றி வேலை வழங்கக் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:25 pm

DIN

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சமின்றி வேலை வழங்கக் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தோணுகால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்குவதில் ஒரு பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவதையும், மற்றொரு பிரிவினருக்கு பாரபட்சம் காட்டுவதையும் தவிா்த்து, அனைவருக்கும் முறையாக வேலை வழங்க வேண்டும். தீண்டாமை கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிய ஏற்பாடு செய்வோம் என மிரட்டுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (வேலை உறுதித் திட்டம்) உமாமகேஸ்வரியிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மூலம் ஊராட்சித் தலைவா், செயலரிடம் கலந்தாலோசித்து கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து, அவா்கள் கூறுகையில், கோரிக்கை நிறைவேறாவிட்டால் குடும்ப அட்டை, ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.