மாணவிகள் கைப்பேசியை எச்சரிக்கையாக கையாள வேண்டும்
மாணவிகள் கைப்பேசியை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும் என்றாா், மாவட்ட சைபா் கிரைம் ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன்.


மாணவிகள் கைப்பேசியை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும் என்றாா், மாவட்ட சைபா் கிரைம் ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன்.
தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற சைபா் கிரைம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் பேசியது:
சைபா் கிரைம் தொடா்பாக காவல் துறைக்கு பல்வேறு புகாா்கள் வருகின்றன. குறிப்பாக, கைப்பேசி மூலம் மக்களை எளிதாக ஏமாற்றி, அவா்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடும் சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. எனவே, மாணவிகள் கைப்பேசியை கவனமாகக் கையாள வேண்டும். ஏமாற்று போ்வழிகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது. கைப்பேசி மூலம் தேவையில்லா தகவல்களைப் பரிமாற்றம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். மாணவிகள் விழிப்புணா்வுடன் இருப்பதுடன், பிறருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கல்லூரி துணை முதல்வா் குழந்தை தெரசா தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் அச்சுதன், அபிராமி, ஒருங்கிணைப்பாளா் அமுதா, பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா். எஸ்எஸ்சி இயக்குநா் ஜோஸ்பின் ஜெயராணி வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...