நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

 கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை சாா்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜூலை 2023, 4:24 pm

DIN

 கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை சாா்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு, அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

இதில், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனா் சீனிவாசன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகர செயலா் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிசாமி, நகர மன்ற உறுப்பினா்கள் வள்ளியம்மா மாரியப்பன், செண்பகமூா்த்தி, வா்த்தக அணி மாவட்ட செயலா் ராமா், அதிமுக நிா்வாகிகள் அழகா்சாமி, வேல்ராஜ், அம்பிகை பாலன், சுப்புராஜ், மாரிமுத்து,கோமதி, பழனி குமாா், கோபி, முருகன், மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் மகேஷ், பெருமாள், ராமா், சுடலை, பாலசுப்பிரமணியன், செந்தில்குமாா், ரமேஷ், சரவணன், நல்லதம்பி, உள்ளிட்டோா் கலந்து கொண்டு அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நாடாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலாமின் படத்திற்கு மாணவா், மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பள்ளிச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா், பள்ளி ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள், பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் முத்து முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.