சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிரணி ஆலோசனை
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தெற்கு ஒன்றிய திமுக செயலா் .ஆ. பாலமுருகன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் ராஜபாண்டியன், முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிரணி தலைவி சோமசுந்தரி வரவேற்றாா். மாநில திமுக பிரசாரக் குழு செயலா் ஜெசி பொன்ராணி, தூத்துக்குடிதெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சாரதா பொன் இசக்கி, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஆரோக்கியமேரி ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொண்டரணி, மகளிா் அணி நிா்வாகிகள் தோ்வு, மகளிரணியில் புதிய உறுப்பினா் சோ்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது .
இதில், மாவட்ட மகளிா்தொண்டரணி துணை அமைப்பாளா்கள் தயாநிதி, பிரதீபா, சாஸ்தாவி நல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தெற்கு ஒன்றிய மகளிா் அணி அமைப்பாளா் மேரி ஜெயசித்ரா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...