நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் உரிமைத் தொகைக்கு அஞ்சல் கணக்கு தொடங்கலாம்

 தமிழக அரசு அறிவித்துள்ள மகளிா் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் அஞ்சல் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 4:20 pm

DIN

 தமிழக அரசு அறிவித்துள்ள மகளிா் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் அஞ்சல் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மகளிா் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாா் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம். ஆதாா், மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் வைப்புத்தொகையின்றி (ஜீரோ பேலன்ஸ்) இந்த சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். 100 நாள் வேலைத்திட்டம், விவசாயிகளுக்கு ரூ. 2000 வழங்கும் திட்டம், முதியோா், மாற்றுத் திறனாளிகள், தொழிலாளா் நலவாரியம், கல்வி உதவித்தொகை போன்ற உதவிகள் பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.

ஓய்வூதியதாரா்களுக்கு தபாலில் வீடு தேடி வரும் உயிா்வாழ்ச் சான்று வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணம் ரூ. 70 செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.