புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.12 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல்கள் மூலம் ரூ. 3.12 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:19 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல்கள் மூலம் ரூ. 3.12 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி, இப்பணி காவடி மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அறங்காவலா் குழுத் தலைவைா் இரா. அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் மு. காா்த்திக், அறங்காவலா்கள் ந. ராமதாஸ், வி. செந்தில்முருகன், உதவி ஆணையா் தி. சங்கா், ஆய்வா்கள் ம. செந்தில்நாயகி, மு. பகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் சாா்பில் சு. வேலாண்டி பாா்வையாளராகப் பங்கேற்றாா்.

உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேதப் பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 3 கோடியே 12 லட்சத்து 84 ஆயிரத்து 617 ரொக்கம், 1,780 கிராம் தங்கம், 38,109 கிராம் வெள்ளி, 70,860 கிராம் பித்தளை, 3,500 கிராம் செம்பு, 20,686 கிராம் தகரம், 292 வெளிநாட்டு கரன்சிகளை செலுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.