காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுமணத்தம்பதி கொலை வழக்கு: பெண்ணின் தந்தையிடம் போலீஸார் விசாரணை

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தையை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News image
Updated On :3 நவம்பர் 2023, 9:57 am

DIN

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தையை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரி செல்வம்(24). இவரும் திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவும் (20) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாம். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்துகொண்டனராம். அதன் பின்னர் புதுமணத் தம்பதி இருவரும் முருகேசன் நகரில் உள்ள மாரிசெல்வம் வீட்டிற்கு வியாழக்கிழமை காலையில் வந்துள்ளனர். 

மாரிச்செல்வத்தின் தாயும், தந்தையும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், புதுமணத்தம்பதி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில், அன்றையதினம் மாலையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், மாரிச்செல்வம் வீட்டுக்குள் புகுந்து அவரையும், கார்த்திகாவையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீஸார், அவர்களது சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனர். 

மாவட்ட எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன், ஊரக டிஎஸ்பி சுரேஷ், நகர டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட கார்த்திகாவின் குடும்பத்தினர் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். 
மேலும், கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் உடற்கூராய்வு முடிந்த நிலையில், இரு வீட்டாரின் உறவினர்களும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் குவிந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை 3 தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். திருமணம் முடிந்து 3 நாள்களில் புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.