ஓட்டப்பிடாரம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
தூத்துக்குடியை அடுத்த ஓட்டப்பிடாரம் அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.


தூத்துக்குடி: தூத்துக்குடியை அடுத்த ஓட்டப்பிடாரம் அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.
ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் மலை, கீழமுடிமண், வெள்ளாரம் பகுதிகளைச் சுற்றியுள்ள காடுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. அவை இரை, தண்ணீா் தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருகின்றன.
இந்நிலையில், ஜெகவீரபாண்டியபுரம் பகுதியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் காயங்களுடன் புள்ளிமான் இறந்து கிடப்பதாக, அப்பகுதியினா் ஓட்டப்பிடாரம் வனத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனச் சரக அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் வனவா் மகேஷ், வனக் காப்பாளா் பேச்சிமுத்து, வனக் காவலா் லட்சுமணன் ஆகியோா் சென்று, புள்ளிமான் சடலத்தை மீட்டனா். 2 வயதுள்ள அந்தப் பெண் மான், இரை தேடி வந்தபோது நாய்கள் கடித்து இறந்திருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். ஓட்டப்பிடாரம் கால்நடை மருத்துவா்கள் கூறாய்வு செய்ததையடுத்து, மான் சடலம் புதைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...