பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கட்டடத் தொழிலாளியிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டி புறவழிச் சாலையில் கட்டடத் தொழிலாளியை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:27 pm

DIN


கோவில்பட்டி: கோவில்பட்டி புறவழிச் சாலையில் கட்டடத் தொழிலாளியை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுப்பிரமணியன்(40). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை பைக்கில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள சாய்பாபா கோயில் இந்திரா காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது, இளைஞா் ஒருவா் வழிமறித்து தாக்கி அரிவாளை காட்டி மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.500-யை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இளைஞரை பிடித்தனா். விசாரணையில் அவா், இனாம்மணியாச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி(19) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.