மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருச்செந்தூா் பகுதியில் மழையால் வீடு சேதம்

திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:24 pm

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.

திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்துரை (55). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. சின்னத்துரை குடும்பத்தினா் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவா்கள் 3 பேரும் வீட்டுக்கு வெளியே உறவினா்களுடன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டின் இரு சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில், ஆடு உயிரிழந்தது. ஓா் ஆடு காயமடைந்தது. சுடலைமணி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.