மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோவில்பட்டி தெப்பக்குளத்தில் கங்கை ஆரத்தி திருவிழா

காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, மஹா கங்கை நடைபெற்ற

News image

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஹா கங்கை ஆரத்தி விழாவில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Updated On :27 நவம்பர் 2023, 10:35 pm

கோவில்பட்டி: காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, மஹா கங்கை ஆரத்தி தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக, 7 கலசங்களில் சப்த நதி தீா்த்தம் அம்மன் சந்நிதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, தெப்பக்குளம் அருகேயுள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிகுறைதீா்க்கும் விநாயகா் கோயிலில் ஸ்ரீ மகா கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து தெப்பத்தில் தீா்த்த அபிஷேகம், புஷ்பம் தூவும் நிகழ்ச்சி, மஹா கங்கை தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

பாஜக வடக்கு மாவட்ட துணைத் தலைவா் பாலா, ஸ்ரீ செல்வமுனிஸ்வரா் கோயில் தலைவா் ஆப்ரகாம் அய்யாதுரை, ஸ்ரீ அருணாச்சல ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் அசோக்குமாா், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்டப் பொதுச் செயலா் பரமசிவம் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.