இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தூத்துக்குடியில் வெவ்வேறு இடங்களில் 2 போ் தற்கொலை

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On :27 நவம்பர் 2023, 10:40 pm


தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

தூத்துக்குடி கே.வி.கே. நகரைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் அபிமன்யு(25). கடந்த சில தினங்களுக்கு முன்னா், இவா் விரும்பிய பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதாம். இதனால் மனம் உடைந்த அபிமன்யு, ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி அண்ணாநகரை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் குருமூா்த்தி(32). இவா் லாரி செட் நடத்தி வந்தாா். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், அவா் கடந்த 22ஆம் தேதி திடீரென விஷம் குடித்து மயங்கியதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.