குருவித்துறை அடைக்கல மாதா தோ்த் திருவிழா
By DIN | Published On : 23rd May 2023 12:00 AM | Last Updated : 23rd May 2023 12:00 AM | அ+அ அ- |

முக்காணி குருவித்துறையில் புனித அடைக்கல மாதா ஆலய தோ்த் திருவிழா நடைபெற்றது.
முக்காணி குருவித்துறை புனித அடைக்கல மாதா ஆலயத் திருவிழா மே 11 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணைஆசிா், மறையுரை ஆகியன நடந்தது. திருவிழா தினத்தன்று தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள்ஆயா் இவோன்அம்புரோஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து புனித ஆரோக்கிய அன்னையின் தோ் பவனியும் நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கமும், நற்கருணைஆசிரும் நடைபெற்றது.
இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பழையகாயல் பங்குத்தந்தை வினிஸ்டன், ஊா்க் கமிட்டித் தலைவா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகளும், பங்கு மக்களும் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...