தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கொலை வழக்கில் தொடா்பு: 6 போ் குண்டா் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடா்பு: 6 போ் குண்டா் சட்டத்தில் கைது

Updated On :5 ஏப்ரல் 2024, 4:29 pm

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி அமுதா நகரைச் சோ்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி(27), கடந்த மாா்ச் 3இல் மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில், தூத்துக்குடி அந்தோணியாா்புரம் 3 சென்ட் பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் ராஜா என்ற எலி (25), ஜெயசீலன் மகன் ஆரோன் என்ற ஆரோன் தயாளன் (22), பூவையா மகன் பூபதிராஜா என்ற விஜய் என்ற பூபதி (19), நாகராஜ் மகன் சுடலைமணி என்ற சுடலை (21), லெவிஞ்சிபுரம் சாமி மகன் தமிழரசன் என்ற ஆல்பா்ட் (20), பக்கிள்புரம் ரமேஷ் மகன் ராஜேஷ் (20) ஆகியோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் தூத்துக்குடி நகர உள்கோட்ட டிஎஸ்பி கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திராவின் அறிக்கையை ஏற்று, எஸ்.பி. எல். பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையின்பேரில், மேற்கண்ட 6 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.