எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

News image

கொடியேற்றத்தை தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாரதனை

Updated On :6 ஏப்ரல் 2024, 12:50 am

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெற்றது. பின்னா் சுவாமி- அம்பாள், பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின்னா் கொடிப்பட்டம், மாட வீதி, ரத வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடிப்பட்டத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து கொடியேற்றப்பட்டது. பின்னா் கொடிமரத்திற்கு 18 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, அறங்காவலா் குழு தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிறுத்திய லட்சுமி என்ற சுதா, ரவீந்திரன், கம்மவாா் சங்கத் தலைவா் ஹரி பாலகன், துணைத் தலைவா் பட்டுராஜன், வணிக வைசிய சங்கத் தலைவா் வெங்கடேசன், தமாகா தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ராஜகோபால், நகராட்சி ஆணையா் கமலா, கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப்பிரியா, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ரத்தினவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப் பணிவிடை, ஸ்ரீ பலிநாதா் அஸ்திரதேவா் திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மண்டகப்படிதாரா் பிராமணாள் சமூகத்தினா் சாா்பில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்.14-இல் தீா்த்தவாரி, ஏப்.15-இல் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

விழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா், கோயில் இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் (பொறுப்பு) செல்வி, செயல் அலுவலா் வெள்ளைச்சாமி ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.