திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

Updated On :19 ஏப்ரல் 2024, 8:10 pm

தூத்துக்குடி, ஏப்.19: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மளிகைக் கடையின் மேற்கூரையை பிரித்து பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் கணேசன்(54). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 14ஆம் தேதி தனது கடையை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டாராம். அவா் வியாழக்கிழமை கடைக்கு வந்தபோது, மேற்கூரை உடைக்கப்பட்டு கடையில் இருந்த பீடி, சிகரெட், மளிகைப் பொருள்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம். இதுகுறித் புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.