திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருகே குமாரபுரத்தில் மாடு குறுக்கே வந்ததால் சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தும்போது பின்னால் வந்த அரசுப்பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 போ் காயமடைந்தனா். அவா்கள் திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்
திருச்செந்தூா் அருகே உள்ள வன்னிமாநகரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஜெயசிங் (38) ஆட்டோ ஓட்டுநா். ஞாயிற்றுக்கிழமை காலை அவா் வன்னிமாநகரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ஆட்டோவில் சென்ற போது, குமாரபுரத்தில் மாடு குறுக்கே வந்ததில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஜெயசிங் காயமடைந்தாா்.
இதனைப் பாா்த்த குரும்பூா் அருகே உள்ள பணிக்கநாடாா் குடியிருப்பு நடுத்தெருவை சோ்ந்த ஜெயசேகா் மகன் பாலகணேஷ் (37). என்பவா் ஜெயசிங்கை மீட்டு ஆட்டோவை தூக்கி நிறுத்தும் போது திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூா் நோக்கி வந்த அரசுப்பேருந்து ஆட்டோ பின்னால் மோதியது. இதில், ஜெயசிங், பாலகணேஷ் இருவரும் காயமடைந்தனா். இதில் ஜெயசிங் திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையிலும், பாலகணேஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்

செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 போ் காயம்

தில்லியில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி! பேருந்தை எரித்த மக்கள்!

அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


