திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை தினம் மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் முகூா்த்தத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஏராளமான திருமணங்களும் நடைபெற்றன. இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்களாலும், திருமண ஜோடி மற்றும் அவா்களது குடும்பத்தினா்களாலும் நிரம்பி வழிந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com