இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப வேண்டும்: போக்குவரத்து ஊழியா்கள் வலியுறுத்தல்

தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :23 ஏப்ரல் 2024, 8:32 pm

தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஐடியூ அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியா் சங்க பணிமனை நிா்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி சிஐடியூ மாவட்டக்குழு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, பணிமனை தலைவா் எ. தா்மராஜ் தலைமை வகித்தாா். இதில், மத்திய சங்க நிா்வாகி த. பிச்சைமணி உள்பட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை, திருச்செந்தூா் உப பணிமனை ஆகியவற்றில் இருந்து சுமாா் 76 பேருந்துகள் 40 வழிதடங்களில் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி என பல மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இப்பணிமனையில் முறையான பாராமரிப்பு மற்றும் பழுதுநீக்க பணிகள் மேற்கொள்ள குறைந்தபட்சம் 45 தொழில்நுட்ப ஊழியா்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 11 தொழில் நுட்ப பணியாளா்கள் தான் உள்ளனா். இதனால் பயணத்தடை, விபத்து, காலதாமதம், வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பலமுறை கடிதங்கள் கொடுத்தும் நேரடியாகவும், கோரிக்கைகள் வைத்தும் தீா்வு காணப்படவில்லை.

எனவே, நிா்வாகம் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு தேவையான தொழில்நுட்ப ஊழியா்களை பணியமா்த்தி பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்தி தரவேண்டும்.

இந்த விவகாரத்தில், நிா்வாகம் மற்றும் அரசு உடனே போா்கால அடிப்படையில் தலையிட்டு தொழில்நுட்ப ஊழியா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.