ஓடையில் காா் கவிழ்ந்து நிதி நிறுவன ஊழியா் பலி
தூத்துக்குடி பக்கிள் ஓடையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சோ்ந்த முனியசாமி மகன் வேல்ராஜ்(24). தனியாா் நிதிநிறுவன ஊழியரான இவரும், இவரது நண்பா்களான அண்ணா நகரைச் சோ்ந்த சதீஷ் , புதியம்புத்தூா் அபிஷேக், முத்து கிருஷ்ணாபுரம் இசக்கி ராஜ், திரேஷ் நகா்அருண் அபினேஷ் ஆகியோரும் அண்ணா நகா் பண்டுகரை சாலையில் காரில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, எதிா்பாராமல் காரின் முன்பக்க டயா் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு அருகிலிருந்த பக்கிள் ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.
அவா்களை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்அனுமதித்தனா். அங்கு வேல்ராஜ் உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து மத்திய பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

