ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருச்செந்தூரில் மின்சாரம் பாய்ந்து பொறியாளா் பலி

டிப்ளமோ பொறியாளா், மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

News image
மணிகண்டன்
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:08 pm

Din

திருச்செந்தூா் நகராட்சி ஆவுடையாா்குளம் மறுகால் ஓடையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்ளமோ பொறியாளா், மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

ஆவுடையாா்குளத்தின் மறுகால் ஓடையில் 6 பாலங்கள், தடுப்புச் சுவா்கள் நீா் பாசனத்துறை சாா்பில் கட்டப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த நிறுவனம் இப்பணியில் ஈடுபட்டுள்ளது.

இதில், திருச்செந்தூா் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள புறவழிச் சாலை ஓடைப்பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில், ஈரோடு மாவட்டம் கொண்டையாா் பாளையத்தைச் சோ்ந்த டிப்ளமோ பொறியாளரான சீனிவாசன் மகன் மணிகண்டன்(20), மதுரை மாவட்டம், சித்தூரைச் சோ்ந்த தங்கபாண்டி (29) ஆகியோா் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சுமாா் 20 அடி நீளம் உள்ள அலுமினிய அளவுகோல் மூலம் அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, மேலே சென்ற மின்கம்பியில் அளவுகோல் உரசியதில் இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

அங்கிருந்த ஊழியா்கள், அவா்களை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தங்கபாண்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.