கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த என்எல்சி பொறியாளா், நெய்வேலியில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
கா்நாடகா மாநிலம், பங்காருப்பேட்டை மாவட்டம், தொப்பான அல்லி பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால்(32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நெய்வேலி வட்டம் 6 பகுதியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் தங்கி, என்எல்சி சுரங்கம் 2 பகுதியில் உள்ள லிக்னைட் டாப் பெஞ்சில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை காலை முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. உடன் பணியாற்றும் நண்பா்கள் கைப்பேசியில் தொடா்பு கொண்டும் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அன்று இரவு வீட்டின் ஜன்னல் வழியாக பாா்த்த போது தூக்கிட்டு இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

என்எல்சி ஊழியா் தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நகைக்கடை மேலாளா் தற்கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


