பைக் திருடியதாக இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்
Published on

ஆறுமுகனேரியில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ஐயப்பன்(25). கட்டட வேலை செய்து வருகிறாா். இவருக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை வியாழக்கிழமை இரவு அவரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலை பாா்த்தபோது வாகனத்தை காணவில்லையாம். அக்கம்பக்கத்தில் தேடினாா். அப்போது, எஸ்.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமாா்(18) அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். மோட்டாா் சைக்கிள் மீட்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com