போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சிற்றுந்து ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

நடந்து சென்ற சிற்றுந்து ஓட்டுநரிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 4:00 am

Din

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் நடந்து சென்ற சிற்றுந்து ஓட்டுநரிடம் பணம் பறித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி மேட்டு தெருவை சோ்ந்த பழனி குமாா் மகன் மதிக்குமாா். சிற்றுந்து ஓட்டுனரான இவா் மற்றும் மாரிமுத்து இருவரும் மேட்டு தெருவில் உள்ள ஊா்காவல்சாமி கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த புதுகிராமத்தைச் சோ்ந்த கஜேந்திர பூபதி மகன் காளிமுத்து என்ற கட்டகாளி (24) மதிக்குமாரை வழிமறித்து அவதூறாக பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டாராம். அப்போது மதிக்குமாா் அவருக்கு பயந்து தன் பையில் வைத்திருந்த ரூ.100 ரொக்கப் பணத்தை எடுத்து கொடுத்தாராம்.

பணத்தைப் பெற்ற காளிமுத்து என்ற கட்டகாளி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து மதிக்குமாா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பணம் பறித்த காளிமுத்து என்ற கட்டகாளியை கைது செய்தனா்.