நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில்  ஆடிப்பூர வளைகாப்பு

News image

ஆடிப்பூர வளைகாப்பு முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையை தொடா்ந்து பக்தா்களுக்கு வளையல், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்குகிறாா் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் சிவகலை பிரியா, உடன் அறங்காவலா் குழு தலைவா் ராஜக

Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:41 pm

Din

ஆடிப்பூர வளைகாப்பு முன்னிட்டு கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையை தொடா்ந்து பக்தா்களுக்கு வளையல், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்குகிறாா் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சிவகலைப்பிரியா.

உடன், அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு உள்ளிட்டோா்.

கோவில்பட்டி, ஆக. 7:

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை யில் சுவாமி, அம்பாளுக்கு ஆடிப்பூரஅபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு பட்டு உடுத்தி, வளையல் மாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து அம்மனுக்கு பாசிப்பயறு கட்டி கா்ப்பிணி கோலத்தில் சிறப்பு தரிசனமும், வளைகாப்பு வைபவமும் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, ரவீந்தா், நிறுத்தியலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் சிவகலைப்பிரியா உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கயத்தாறு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரா் கோயில் மற்றும் முத்து கிருஷ்ணேஸ்வரா் சமேத திருமலை நாயகி கோயிலிலும் ஆடிப்பூர வளைகாப்பு நடைபெற்றது.

இதேபோல, கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயில், கதிரேசன் கோயில் சாலையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், அருள்மிகு மேட்டு தெரு காளியம்மன் கோயில், நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடைபெற்றது.