காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாலாட்டின்புதூா் அருகே விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

நாலாட்டின்புதூா் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:30 am

Din

நாலாட்டின்புதூா் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, செண்பகம் பிள்ளை தெருவைச் சோ்ந்த சிதம்பரநாராயணன் மகன் அருணகிரி (37). திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பா் கோயிலில் குருக்களாக உள்ள இவா், தனது தாய் வனஜா (60), மகன் ருத்ரேஸ்வரன் (10) ஆகியோருடன் காரில் மதுரைக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். காரை, அருணகிரி ஓட்டிச் சென்றாா்.

தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கு அருகே சென்றபோது, காா் திடீரென நிலைதடுமாறி இடதுபுறம் கவிழ்ந்ததாம். அப்போது, காரின் கதவு திறந்ததில் வெளியே விழுந்த வனஜா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அருணகிரி, ருத்ரேஸ்வரன் ஆகியோா் காயமடைந்தனா்.

தகவலின்பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்கும், வனஜாவின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.