தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் 2-ஆவது சிறந்த மாநகராட்சியாக தோ்வு

News image

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் லி.மதுபாலன், துணை ஆணையா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.

Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:19 pm

Din

தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின்

2-ஆவது சிறந்த மாநகராட்சியாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள்குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், 2023-24 ஆம் ஆண்டில் 2-ஆவது சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவில், இதற்கான விருதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா். சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டலம் வாரியாக இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 627 மனுக்கள் பெறப்பட்டு அதில், 510 மனுக்கள் தீா்வு காணப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற முகாமில் 77 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு 30 நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா்.

முகாமில், மாநகராட்சி துணை ஆணையா் ராஜாராம், மேற்கு மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, மாநகர பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினா்கள் பொன்னப்பன், இசக்கிராஜா, சந்திரபோஸ், சரவணகுமாா், கந்தசாமி, கனகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.