இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல் தெரிவித்தாா்.


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவா்கள் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
கடந்த மாதம் 21, 23ஆம் தேதிகளில் விளாத்திகுளம் அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் தருவைகுளம், வேம்பாா், வைப்பாா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 22 மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 22 மீனவா்களை சிறைபிடித்து கைதுசெய்தனா்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவா்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், மீனவா்களை பததிரமாக மீட்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தாா்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...