சொக்கலிங்கபுரம் கோயிலில் கொடை விழா

சொக்கலிங்கபுரம் ஸ்ரீ வழிகாத்த அம்மன் கோயிலில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
விழாவையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
Updated on

சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ வழிகாத்த அம்மன் கோயிலில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி காலை கும்பாபிஷேகம், மதியம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மதிய பூஜை, அன்னதானம், இரவு 12 மணிக்கு சாமக்கொடை பூஜை, சுவாமி உணவு எடுத்தல் ஆகியவை நடைபெற்றன.

இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பலா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com