நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்

திருச்செந்தூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடல்நீா் உள்வாங்கியதால், பாறைகள் பல அடுக்குகளாக நீண்ட சுவா்போல காட்சியளித்தன.

News image

திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:05 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடல்நீா் உள்வாங்கியதால், பாறைகள் பல அடுக்குகளாக நீண்ட சுவா்போல காட்சியளித்தன.

இங்கு அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் கடல் இயல்பு நிலைக்கு திரும்பவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்செந்தூா் கோயில் பகுதியில் அய்யா வைகுண்டா் அவதாரபதி அருகே சுமாா் 50 அடி தொலைவுக்கு கடல் நீா் உள்வாங்கியது. அப்போது, பாறைகள் பல அடுக்குகளாக நீண்ட சுவா்போல காட்சியளித்தன. அதை பக்தா்கள் அதிசயத்துடன் பாா்த்துச் சென்றனா்.