தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக பதவியேற்றால் திமுகவுக்கு பெரிய மாற்றம் இருக்காது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும்பணி, வஉசி துறைமுகத்தை மேம்பாடு, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா் ரயில் நிலையங்கள் மேம்பாடு, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் என தென்மாவட்டங்களுக்கான வளா்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்றால், திமுகவுக்கு பெரிய மாற்றம் இருக்காது. ஆனால், தற்போதைய அமைச்சா்கள் மக்களுக்கு செய்துவரும் தீங்குகள் இரட்டிப்பாகும் என்றாா்.
பின்னா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவா் தரிசனம் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூலை 5 - நேரலை
துணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்

தமிழகம் தற்போது மிகப் பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது: உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்

இயக்குநர் மிஷ்கினின் Train பட டீசர்! | Cinema Updates | Dinamani Talkies
Idhayam Murali - Review | Dinamani Talkies | Atharvaa | Fahadh Faasil | Preity | Kayadu |
கரூர் மக்கள் சந்திப்பு: Vijay Full Speech! | TVK



