தூத்துக்குடி
ஆத்தூரில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு
ஆத்தூா் பேரூராட்சியில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே. கமால்தீன் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கேசவன், பாலசிங், அசோக்குமாா், பிச்சிமுத்து(எ) சிவா, முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் இந்த நிகழ்வில் வட்டார ஐசிடிசி ஆற்றுநா் அமராவதி, ஆய்வக நிபுணா் சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளா்கள் சுபாஷ், ஹரி ராமச்சந்திரன் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலகப் பணியாளா்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு இணைந்து ஆத்தூா் பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.