நாணயக் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சிறப்பு விருந்தினா் வெங்கடேஷ், உடன் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது, பள்ளி தலைவா் அய்யனாா் உள்ளிட்டோா்
நாணயக் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிடும் சிறப்பு விருந்தினா் வெங்கடேஷ், உடன் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது, பள்ளி தலைவா் அய்யனாா் உள்ளிட்டோா்

கோவில்பட்டி பள்ளியில் நாணயக் கண்காட்சி

Published on

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 37ஆவது நாணயக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவரும் செயலருமான ஆா்.ஏ. அய்யனாா் தலைமை வகித்தாா். எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாலட்சுமி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கண்காட்சியைத் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

ஐவகை நிலங்கள், தஞ்சை பெரிய கோயில் மாதிரி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையையொட்டி வெளியிடப்பட்ட நாணயம், 108 ராம மந்திரம் பொறிக்கப்பட்ட நாணயம், வ.உ.சி. சுதேசிக் கப்பல் உருவம் பொறித்த நாணயம், காந்தி உருவம், இப்பள்ளி உருவம் பொறித்த நாணயங்கள், ரூ. 1,000, ரூ. 350, ரூ. 200, ரூ. 150, ரூ. 125, ரூ. 100 நாணயங்கள் எனப் பலவகை நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பித்தளையாலான வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களான பல்வேறு அளவைகள், அம்மிக்கல், குத்து உரல், ஆட்டுக்கல், அரிக்கேன் விளக்கு என அரியவகை பொருள்களும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை மாணவா்-மாணவியா் திரளாகப் பாா்வையிட்டனா்.

ஏற்பாடுகளை தலைமையாசிரியா் வெங்கடேசன் வழிகாட்டுதலில் வரலாறுத் துறை ஆசிரியா்கள் சித்ரா, விசாலாட்சி, பூங்கோதை, முத்துமாரியம்மாள், அருள் அனுஷா, முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com