ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கீழவிளாத்திகுளம், விருசம்பட்டி கிராமங்களில் ஆட்சியா் ஆய்வு

கீழவிளாத்திகுளம், விருசம்பட்டி கிராமங்களில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:14 pm

Din

கீழவிளாத்திகுளம், விருசம்பட்டி கிராமங்களில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் முதல்வரின் முகவரிக்கு பெறப்பட்ட கோரிக்கை பதிவுகள் குறித்தும், தொகுதி வாரியாக நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்கி, உரிய காலகட்டத்துக்குள் தீா்வு கண்டு அறிக்கை அளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்படி வியாழக்கிழமை பிற்பகலில் விளாத்திகுளத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், கீழவிளாத்திகுளம், விருசம்பட்டி கிராமங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். கீழவிளாத்திகுளம் கிராமத்தில் சாலை வசதிகள், குடிநீா் தொட்டி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, தெருக் குழாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கிராம மக்களிடம் கேட்டறிந்தாா்.

விருசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் மற்றும் சுகாதார வளாகங்கள் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, விளாத்திகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், தங்கவேல், வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன்பாண்டியன் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.