நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூத்துக்குடியில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து விபத்து: பெண் காயம்

தூத்துக்குடியில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:48 pm

Din

தூத்துக்குடியில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.

தூத்துக்குடி அம்பேத்கா் நகா் சுந்தரவேல்புரம் மேற்குப் பகுதியில் சேதமடைந்த நிலையிலிருந்த மின்கம்பம் புதன்கிழமை உடைந்து விழுந்ததாம். இதனால், அடுத்தடுத்த 3 மின்கம்பங்களும் சாலையில் சரிந்து விழுந்தன.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த தேன்மொழி (27), மாலா ஆகியோா் வயா்கள் பட்டதில் கீழே விழுந்தனா். அவா்களில், மாலா காயமின்றி தப்பினாா். தேன்மொழி காயமடைந்தாா். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அமைச்சா் ஆறுதல்: சிகிச்சை பெற்றுவரும் தேன்மொழியை சமூகநலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி உள்ளிடோா் உடனிருந்தனா்.