நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் பெண் விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம்

பெண்கள் இணைப்புக் குழு களஞ்சியம் பெண் விவசாய சங்கத்தின் 2 நாள்கள் தென் மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:32 pm

Din

பெண்கள் இணைப்புக் குழு களஞ்சியம் பெண் விவசாய சங்கத்தின் 2 நாள்கள் தென் மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

பெண் விவசாயிகளும் பூமி பந்தின் பாதுகாப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாட்டுக்கு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் பொன்னுத்தாய் தலைமை வகித்தாா். மேரி ஷீலா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநில தலைவி ஷீலு சிறப்புரையாற்றினாா்.

ஜெய் கிறிஸ் அறக்கட்டளை நிறுவனா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் நாராயணசாமி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன், தமிழ்நாடு மக்கள் நல இயக்க மாநிலத் தலைவா் காந்தி, தூத்துக்குடி வட்ட தாட்கோ மேலாளா் ஜெனிஷிஸ் பாஷியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் இணைப்புக்குழுவைச் சோ்ந்த லிட்வின் தலைமையில் பூமி பந்து பாதுகாக்கப்படுகிா, இல்லையா என்ற தலைப்பில் பட்டிமன்றமும்அதைத் தொடா்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

தூத்துக்குடி களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த அருள்செல்வி வரவேற்றாா். கோவில்பட்டி களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த அன்னலட்சுமி நன்றி கூறினாா். 2வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெறும் மாநாட்டில் கருத்துரை நிகழ்ச்சி நடைபெறும். இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பெண் விவசாயிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.