நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ள அபாயம்: தாமிரவருணி கரையோர மக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

தாமிரவருணி கரையோர மக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:07 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தாமிரவருணி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் குளிக்கவோ, கரையோரம் செல்லவோ வேண்டாம் என ஆட்சியா் க. இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தூத்துக்குடி மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் வியாழக்கிழமை காலைமுதல் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, மருதூா், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூா் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம். நீா்நிலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்டம் முழுவதும் 639 குளங்களில் 32 குளங்கள் 70 சதவீதத்திற்கும் மேல் நீா் நிரம்பி உள்ளன. ஒட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள ஒட்டநத்தம் குளம், முரம்பன்குளம் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. இதிலிருந்து வெளிப்படும் நீா்வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது

மேலும், மாவட்டத்தில் 97 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. வெள்ள மீட்பு பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் உள்ள 41 படகுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.