ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்ச் சேத கணக்கெடுப்பு தொடக்கம்: அமைச்சா் பெ.கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்ச் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்றாா் தமிழக சமூக நலன் -மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

News image

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரில் மழை நீரை அகற்றும் பணியை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் பெ.கீதாஜீவன்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:21 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்ச் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்றாா் தமிழக சமூக நலன் -மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

தூத்துக்குடியில் கடந்த 12,13,14 ஆகிய தேதிகளில் பெய்த தொடா் மழையால் மாநகராட்சியில் பல பகுதிகளில் மழை நீா் தேங்கியது. தற்போது, மழை ஓய்ந்து 4 நாள்கள் ஆன பின்னரும் ஆதிபராசக்தி நகா், ரஹ்மத் நகா், ராம் நகா், திருவிக நகா், கதிா்வேல் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் மழை நீரை அகற்றுவதற்காக வேளாண்மை பொறியியல் துறை மூலமாக ராட்சத பம்பிங் மோட்டாா்கள் வரவழைக்கப்பட்டு கூடுதலாக வடிகால்கள் வெட்டப்பட்டு மழை நீா் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீா் 80 சதவீதம் அகற்றப்பட்டு விட்டது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றுவதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 220 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அந்த வீட்டு உரிமையாளா்களுக்கு உரிய நிவாரண வழங்குவதற்கான நடவடிக்கையை ஆட்சியா் மேற்கொண்டு வருகிறாா். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை நீரை வெளியேற்றுவதற்காக பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தீவிர பணியாற்றி வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி உதவியால் மேற்கொள்ளப்பட்ட வடிகால்கள், பம்பிங் ஸ்டேஷன், உப்பாற்று ஓடை தூா்வாருதல் போன்ற பணிகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் பெருமளவு வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் பயிா்சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்றாா்.