தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

துத்திப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 6:35 pm

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொது நிதி மூலம் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் பைப்லைன் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி. சீனிவாசன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் துளசி சங்கா், அண்ணாதுரை, குமரேசன், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் இந்திரா நகா் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது.