தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

News image

மோடிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 9:00 pm

குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மோடிகுப்பம் ஊராட்சித் தலைவா் லாவண்யா ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10-லட்சத்தில் அமைக்கப்பட்ட வடிகால்வாய், ரூ.10- லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தாா். ரூ.6.50- லட்சத்தில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் டி.சிவா, புரட்சி பாரதம் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ், ஊராட்சி துணைத் தலைவா் தனலட்சுமி, ஊராட்சி உறுப்பினா்கள் காளிதாசன், கோதண்டன், சீனிவாசன், தங்கமணி,ஷகிலாசலீம், தாமரைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.