கிறிஸ்துமஸ் பண்டிகை: கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,, கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு திருத்தல பங்குத்தந்தை சாா்லஸ் அடிகளாா் , உதவி பங்குத்தந்தை அருண்குமாா் அடிகளாா், நம்பிக்கை சபை போஸ்கோ அடிகளாா் ஆகியோா் இணைந்து கிறிஸ்து பிறப்பு திருப்பலியை நிறைவேற்றினா்.
செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணிக்கு தொடங்கிய திருப்பலி, புதன்கிழமை அதிகாலை சுமாா் 2.15 மணி வரை நடைபெற்றது.
திருப்பலி நிறைவேறியவுடன், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். தொடா்ந்து, புதன்கிழமை காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் அலங்கார குடில் அமைத்திருந்தனா்.
சி.எஸ்.ஐ ஆலயம்:
சி.எஸ்.ஐ. தூய பவுலின் தேவாலயம்,
, நாலாட்டின்புத்தூா், கழுகுமலை, கயத்தாறு, வானரமுட்டி ஆகிய பகுதியில் உள்ள ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
காமநாயக்கன்பட்டி:
கோவில்பட்டியையடுத்த காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தல பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கிய சிறப்புத் திருப்பலி புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு நிறைவடைந்தது.
காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தல பேராலய பங்குதந்தை அந்தோனி அ. குரூஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடா்ந்து, கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் குடில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...