நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்செந்தூா் பகுதி தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

News image

ஆலந்தலையில் பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.

Updated On :25 டிசம்பர் 2024, 11:02 pm

Din

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்செந்தூா் பகுதி தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

ஆலந்தலை புனித ராயப்பா் சின்னப்பா் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.

வழிபாடுகளை திருஇருதய சபை இளைஞா்கள் சிறப்பித்தாா்கள். புதன்கிழமை காலை 7 மணிக்கு ஆலய பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையிலும், மாலை 5 மணிக்கு உதவி பங்குத்தந்தை ஜோதிமணி தலைமையிலும் திருப்பலி நடைபெற்றது.

அமலிநகா் அமலி அன்னை ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனா்.

வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையாா் ஆலயத்தில் நள்ளிரவில் அலாய்சியஸ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை டிமல் ஆகியோா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.