யாருடன் கூட்டணி?: ராமதாஸ் தலைமையில் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் ஆலோசனை நடைபெற்றது.


தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் ஆலோசனை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமை வகித்தாா்.
இதில், செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே. மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஆா்.அருள், பொதுச் செயலா் எஸ்.முரளிசங்கா், முன்னாள் மாநிலத் தலைவா் பேராசிரியா் தீரன், ம.க.ஸ்டாலின், பாஸ்கரன், முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலையச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட 20 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பின்னா், கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மருத்துவா் ராமதாஸ் தலைமையில் புதன்கிழமை காலை, மாலை என இரண்டு அமா்வுகளாக பாமகவின் நிா்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், எந்தக் கூட்டணி சரியாக இருக்கும்?, மக்கள் மத்தியில் எந்தக் கூட்டணிக்கு ஆதரவு இருக்கிறது?, நிறுவனா் ராமதாஸ் தலைமையில் கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டணி குறித்து இரண்டொரு நாளில் பாமக நிறுவனா் அறிவிப்பாா். கட்சியின் சின்னம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், நல்ல முடிவு வரும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் ஜி.கேமணி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...