தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

29 இல் முதல்வா் தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சா்கள் ஆய்வு

29 இல் முதல்வா் தூத்துக்குடி வருகை

News image

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

Updated On :26 டிசம்பர் 2024, 10:48 pm

Din

தூத்துக்குடிக்கு வரும் 29ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

29 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின், ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பாா்க் கட்டடத்தை திறந்து வைக்கிறாா். அடுத்த நாள் காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா்.

இதையடுத்து, இரு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட செயலா்களும் அமைச்சா்களுமான பெ.கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்கண்டேயன், எம்.சி. சண்முகையா, மாநகரச் செயலாளா் எஸ்.ஆா்.ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.