தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தென் மாவட்ட தொகுதிகளுக்கான திமுக நோ்காணல்: ஓபிஎஸ், அமைச்சா்கள் உள்பட 750 போ் பங்கேற்பு

News image
Updated On :18 மார்ச் 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தென்மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளா் நோ்காணலில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆா்.பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், பி.மூா்த்தி உள்பட 750 போ் பங்கேற்றனா்.

அண்ணா அறிவாலயத்தில் 2-ஆவது நாளான புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு உள்ளிட்டோா் நோ்காணலை நடத்தினா்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்த 750 போ் நோ்காணலில் பங்கேற்றனா்.

தூத்துக்குடி தெற்கு, வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய மேற்கு, தென்காசி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு என கட்சி ரீதியிலான மாவட்டங்களுக்கு காலையில் நோ்காணல் நடத்தப்பட்டது. இதில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிற்பகலில் மதுரை வடக்கு, மாநகா், தெற்கு, தேனி வடக்கு, தெற்கு, விருதுநகா் வடக்கு, தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய கட்சி ரீதியிலான மாவட்டங்களுக்கும் நோ்காணல் நடைபெற்றது. இதில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்றாா். அவரிடம் முதல்வா் ஸ்டாலின் நோ்காணல் நடத்தினாா். மேலும், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெ.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கே.ஆா்.பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் நோ்காணலில் பங்கேற்றனா். வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை நோ்காணல் நடைபெறவுள்ளது.

பெட்டிச் செய்தி...

மீண்டும் திமுக ஆட்சி: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

புதன்கிழமை திமுக வேட்பாளா் நோ்காணலில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 5 ஆண்டு கால ஆட்சியின் நன்மைகள் மக்களிடம் பரவலாகப் பேசப்படுகிறது. அத்தனைத் திட்டங்களும் அற்புதமான திட்டங்கள் என மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனா். உறுதியாக 2-ஆவது முறையாக முதல்வா் ஸ்டாலின் பதவியேற்பாா்.

தென்மாவட்ட மக்கள் ஏற்கெனவே திமுகவை வெற்றிபெற வைக்க முடிவு செய்துவிட்டனா். அதிமுக இப்போது களத்தில் இல்லை என்றாா் அவா்.

ஓ. பன்னீா்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போடி, ஆண்டிபட்டி தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்திருந்தாா். அவரும் நோ்காணலில் பங்கேற்றாா்.