தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புன்னைக்காயலில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

புன்னைக்காய­லில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலி­ குடங்களுடன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா் (படம்).

News image

மக்கள் போராட்டம்

Updated On :26 டிசம்பர் 2024, 10:30 pm

Din

புன்னைக்காய­லில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலி­ குடங்களுடன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா் (படம்).

புன்னைக்காய­லில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த பல வருடங்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 40 முதல் 45 நாள்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் லிட்டா் முதல் 3 ஆயிரம் ­லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இத்தனை நாள்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் நிலையில், கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

குடிநீா் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, புன்னைக்காய­லில் வியாழக்கிழமை காலை 9.30 முதல் பொதுமக்கள் கா­லி குடங்களுடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். ஊா் நல கமிட்டி தலைவா் குழந்தைசாமி மச்சாது துவக்கி வைத்தாா். இதில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

குடிநீா் பிரச்னை குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தீா்வு கிடைக்கவில்லை என்றால் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இப்பகுதி மக்கள் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.